×

சென்ட்ரல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பழுதான எடைப்பாலத்தை ஏலம் விட முடிவு

கோவை, அக்.4:கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள எடைப்பாலத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘கோவை மைய அலுவலகத்தில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் உள்ள எடைப்பாலம், கணக்கீட்டு இயந்திரம், அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவணித்தொகையாக ரூ.10 ஆயிரத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோவை மையம் என்ற பெயரில் டிடி எடுத்து வரும் 24ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடைப்பாலம் 20 டன் மற்றும் 70 மெட்ரிக் டன் எடை கொண்டுள்ளது. மேலும் இவற்றை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் பார்வையிடலாம்,’’ என தெரிவித்தார்.

Tags : office ,Central RTO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...