×

திருப்புத்தூர் பகுதியில் மழை பெய்யும் நம்பிக்கையில் விவசாய பணிகள் மும்முரம்

திருப்புத்தூர், அக்.4: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் சோழம்பட்டி, திருக்களாப்பட்டி கே.வைரவன்பட்டியில் வயல்களில் விவசாயிகள் தொடர் மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. திருப்புத்தூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கண்மாயில் சிறிதளவே தண்ணீர் உள்ளது. இருப்பினும் மோட்டார் மூலம் கண்மாய் உள்ள நீரை வயல்களில் பாய்ச்சி கூடுதல் செலவுடன் விவசாயப் பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் விவசாயம் செய்ய  முடியாமல் இப்பகுதி விவசாயிகள் கட்டடம், விறகு வெட்டுதல், ஹோட்டல் போன்ற கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாக திருப்புத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் நல்ல மழையால் கண்மாயில் சிறிது தண்ணீர் இருக்கிறது.

அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த மழையும் கை கொடுத்தால் முழுமையான விளைச்சல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தற்போது கண்மாய்களில் உள்ள தண்ணீர் இரண்டு மாத்திற்கு பயன்படுத்த முடியுமாம். விளைச்சல் நன்றாக இருந்தால் ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35 மூடை வருமாம். சிறு குழந்தைகளையும் நாற்றங்கால் வயல்களில் நாற்று எடுக்க கற்றுக் கொடுக்கின்றனர். திருப்புத்தூர் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளதால் இப்பகுதியில் உள்ள கே.வையிரவன்பட்டி, சுண்டக்காடு, வேலங்குடி, சோழம்பட்டி, மணக¢குடி, புதூர், பட்டமங்கலம், கருங்குளம், தெக¢கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக  விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : area ,Thriputtur ,
× RELATED சீர்காழி பகுதியில் ரூ.64 லட்சம்...