×

கீழடி அகழாய்வு குறித்து அமைச்சர் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

திருத்துறைப்பூண்டி, அக்.4: கீழடி அகழாய்வு குறித்து அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்த தவறான கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இந்த அகழாய்வு பணி செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் வற்புறுத்தின. இதைத்தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேலும் இரண்டு வாரம் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போது கீழடியில் பழங்காலத்தில் நெசவு தொழில் சிறந்து விளங்கியுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் புறநானூற்றில் உள்ளது என்றும், தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண் ஆய்வாளர் ஒருவர் கூறியதை அமைச்சர் மா.பாண்டியராஜன் மறுத்ததோடு ஏற்கனவே கீழடி ஆய்வுகள் குறித்து எழுத்தாளர் வெங்கடேசன் தவறான தகவலை கூறிவருவதாகவும் அந்த வரிசையில் நீயும் தவறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். எழுத்தாளரும் மதுரை எம்.பியுமான வெங்கடேசனின் தீவிர முயற்சியால்தான் இப்போது கீழடியில் தமிழர்களின் தொன்மை வாய்ந்த பல தகவல்கள் வந்துகொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலின் நாகரிகத்தை காட்டுகிற ஆதாரமாகவும் வேளாண்மை மற்றும் நெசவுத் தொழிலிலும் சிறந்து விளங்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதற்கு பிறகும் அமைச்சர் பாண்டியராஜன் இப்படி மறுப்பு தெரிவித்தும் எழுத்தாளர் வெங்கடன் தவறான கருத்து தெரிவித்து வருவதாகவும் தவறான முறையில் பேசுவதும் பெரும் கண்டனத்திற்குரியது என்றார்

Tags : Marxist ,minister ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...