×

பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் ஒரே இரவில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பொன்னமராவதி, அக்.4: பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் ஒரே இரவில் 4வீடுகள் உடைக்கப்பட்டு நகை, பணம், மோட்டார் சைக்கிள் கொள்ளையடித்துச்சென்ற பலே கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்வரது வீட்டின் கதவு உடைத்து தங்க செயின் மற்றும் ரூ.18 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். தனியார் பள்ளி ஆசிரியை முத்துப்பாரதி என்பவர் வீட்டினை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் ஆதிராஜா என்வர் காம்பவுண்ட் வீடடில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், பொம்மாசி என்பவர் வீடு உடைக்கப்பட்டு வௌ்ளிக்காசுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (2ம் தேதி) நள்ளிரவில் ஒரே நாளில் 4 வீடுகள் உடைக்கப்பட்டு பணம், தங்க நகை, வௌ்ளி, மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்த வீடுகளை இலுப்பூர் டிஎஸ்பி. சிகாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை காரையூர் போலீசார் தேடி வருகின்றனர். கிராமப்புறப் பகுதியான சடையம்பட்டியில் 4 வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jewel ,robbery ,houses ,Ponamaravathi ,Sadaampatti ,
× RELATED அடுத்தடுத்த வீடுகளில் பணம், நகை கொள்ளை