×

அஷ்டலட்சுமி கோயிலில் 1008 கலச திருமஞ்சனம்

சென்னை: பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலில் உலக நன்மைக்காக இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று மாலை 6 மணியளவில் கணபதி ஹோமம், 7 மணிக்கு லட்சுமி குபேர ஹோமம், 8 மணிக்கு கலச ஆராதனை, இரவு 9 மணியளவில் கணபதி ஹோமம் முடிவடைந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை காலை 7.30 மணியளவில் நித்திய ஆராதனை, 8.30 மணியளவில் விசேஷ ஸ்ரீசுத்த ஆராதனை, 9.30 மணிக்கு 1008 கலச திருமஞ்சனம் ஆரம்பம். தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு பிரதான கலச திருமஞ்சனம், பகல் 2 மணியளவில் தீர்த்த பிரசாதம், மாலை 4 மணியளவில் நவராத்தி விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Kalasa Thirumanganam ,
× RELATED அஷ்டலட்சுமி கோயிலில் 1008 கலச திருமஞ்சனம்