×

புதுகுட்டை தூர்வாரும் பணி

கோவை.அக்.2:  கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்காடு ஊராட்சியில்  புதுகுட்டை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் 45 குடிமராமத்து பணிகள் ரூ.7.43கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் அல்லது நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் அல்லது பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள இத்திட்டமானது அந்தந்த பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்காடு பகுதியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ்  ரூ.1 லட்சம் மதிப்பில் புதுக்குட்டை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபட்டு பார்வையிடப்பட்டுள்ளது. இதேபோன்று காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 42 குட்டைகள் தலா ஒரு 1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம்  விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை