×

கோத்தாரி சர்க்கரைஆலையின் கரும்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம் லால்குடியில் நடந்தது

லால்குடி, அக்.1: லால்குடி அடுத்த காட்டூரில் அமைந்துள்ள கோத்தாரி சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது லால்குடியை அடுத்த காட்டூரில் அமைந்துள்ள கோத்தாரி சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் லால்குடியில் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் சர்க்கரை ஆலை பொது மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். சர்க்கரை ஆலையின் இயக்குநர் சில்வர் ஸ்டார் கோல்டுவின் தலைமை உரையாற்றினார். கோவை கரும்பு இனப்பெருக்க நிலையத்திலிருந்து கரும்பு சாகுபடி தொழிநுட்ப முதுநிலை விஞ்ஞானிகள் வெண்ணிலா, ராமசுப்ரமணியன் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு கரும்பில் மணி வள நிர்வாகம் பூச்சு, நொய் நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் சிவராசு கலந்து கொண்டு கோட்டவாரியாக அதிக மகசூல் எடுத்த முதல் மற்றும் இரண்டாம் பரிசுபெற்ற விவசாயிகளை கவுரவப்படுத்தும் விதமாக கோத்தாரி சர்க்கரை ஆலையின் முன்னால் தலைவர் கோத்தாரியின் நினைவு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட வேளாண்மை இயக்குநர் சந்தான கிருஷ்ணன், லால்குடி உதவி வேளாண்மை இயக்குனர் ஜெயராணி, ரோட்டரி மாவட்ட கவர்னரும், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜமீர்பாஷா விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சொற்பொழிவாற்றினார்.  இதில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், ஒன்றியத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பொதுமேலாளர் இளவரசன் செய்திருந்தார். ஆலையின் உதவி பொது மேலாளர் கோபி நன்றி கூறினார்.

Tags : seminar ,sugarcane farmers ,sugar plantation ,Kothari ,Lalgudi ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்