×

மயான சாலையில் கல் ஊன்றி ஆக்கிரமிப்பு போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

விருதுநகர், அக். 1: அருப்புக்கோட்டை அருகே, நார்த்தம்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நார்த்தம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் மற்றும் பிற சமூகத்தினருக்கு சொந்தமான 4 மயானங்கள் உள்ளன. இந்த மயானங்களுக்கு செல்லும் சாலையை 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். ஊராட்சி நிதியில் மயானச்சாலையில் செம்மண் ரோடு போடப்பட்டுள்ளது.  இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த போலீஸ்காரர் ரமேஷ், அவரது தந்தை சந்திரசேகர், தாயார் செல்வராணி ஆகியோர், அரசால் போடப்பட்ட மயானச் சாலையை ஆக்கிரமித்து, கற்களை ஊன்றி வேலி போட்டுள்ளனர். இதனால், ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவ்வழியாக செல்லும் மக்களை சாதியை சொல்லி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தட்டிக்கேட்கும் ஆண்கள் மீது போலீஸ் மூலம் பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். எனவே, மாயனங்களுக்கு சென்று வரும் வகையில், அரசு அமைத்துள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்த, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : occupant policeman ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை