×

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலூர், அக். 1: முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் வினாடிக்கு 616 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1132 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.55 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1132 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1360 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 3529 மில்லியன் கன அடியாக இருந்தது.வைகையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1296 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 960 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 3267 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 31 கனஅடியாகவும்,  அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 61.09 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.00 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் 160.42 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையளவு: பெரியாறு 23 மி.மீ, தேக்கடி 16 மி.மீ, கூடலூர் 54 மி.மீ, உத்தமபாளையம் 35.3 மி.மீ, வீரபாண்டி 3.5 மி.மீ, வைகை 20 மி.மீ, சோத்துப்பாறை 46 மி.மீ, மஞ்சளாறு 38 மி.மீ, மழை நேற்று பதிவாகி இருந்தது.

Tags : catchment area ,
× RELATED வெளிமாநிலங்களில் இருந்து...