×

உதவியது ‘வாட்ஸ்அப்’ கொலை செய்யப்பட்டவர் அடையாளம் கண்டுபிடிப்பு

திருப்புவனம், அக்.1:  திருப்புவனம் டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் வாட்ஸ்அப் குரூப் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.  திருப்புவனத்தில் இருந்து கலியாந்தூர் செல்லும் வழியில்  டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே உள்ள வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவர் யார், கொலையாளிகள் யார் என திருப்புவனம் போலீசார் விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்டவரின் போட்டோவை பல்வேறு வாட்ஸ் அப் குரூப்பில் போலீசார் பதிவிட்டிருந்தனர். அந்த போட்டோவை பார்த்தவர்கள்  இறந்தவர் மதுரை அருகே விராதனூர் சத்யாநகரை சேர்ந்த ராமராஜன் மகன் கணேசன் (33)  என்றும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி எனவும் தெரிவித்தனர். அவரின் மனைவி முருகேஸ்வரிக்கு விவரம் தெரிந்ததும் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டார். இறந்த கணேசன் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெயிண்ட் அடிக்கும் வேலை விசயமாக வீட்டை விட்டு வெளியே வந்தார். மூன்று நாட்களாக தேடி வருவதாக முருகேஸ்வரி கூறினார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கொலைக்கான காரணத்தை விசாரித்து வரும் போலீசார், கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : murderer ,
× RELATED நெல்லையில் கொலையானவரின் உடலை வாங்க மறுப்பு.: உறவினர்கள் போராட்டம்