×

ஆர்.கொமாரபாளையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ராசிபுரம், அக்.1:  குருசாமிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி சார்பில், 85.ஆர்.கொமாரபாளையத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

திட்ட அலுவலர் ரகோத்தமன் வரவேற்றார். பள்ளிகளின் தலைவர் பரசுராமன், செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக சேவை அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் சுகாதார விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது.

Tags : R. Comarapalayam Country Welfare Project Camp ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி