×

குமாரபாளையத்தில் பார்வையற்றோருக்கான இலவச மருத்துவ முகாம்

குமாரபாளையம், அக்.1: குமாரபாளையம் புளியம்பட்டியில் உள்ள கண்பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. விடியல் ஆரம்பம் தொண்டு அமைப்பின் மூலம் நடைபெற்ற முகாமினை, திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்து பேசினார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சர்க்கரை நோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், மூட்டு சிகிச்சை மற்றும் பொது மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது. மருத்துவர்கள் நந்தகுமார், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சையளித்தனர். விடியல் அமைப்பின் தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags : Free Medical Camp ,Blind ,Kumarapalayam ,
× RELATED மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்