×

காஞ்சிபுரம் மாவட்ட கோரிக்கை மாநாட்டில் இறால் பண்ணை அமைவதற்கு தடை விதிக்கவேண்டும்

திருக்கழுக்குன்றம், அக்.1: காஞ்சிபுரம் மாவட்ட கோரிக்கை மாநாட்டில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இறால் பண்ணைகளை, கடலோர பகுதிகளின் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கலெக்டர் பொன்னையா தலைமையில், மீனவர் குறைதீர் கூட்டம், நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியூசி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட கோரிக்கை மாநாடு கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூபாலன், லதா, ஐயப்பன், இன்பராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர்கள் சின்னதம்பி, ஜஹாங்கீர், மாநில துணை தலைவர் சங்கையா, மாநில குழு உறுப்பினர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம்படி, மீனவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.    மீனவர்களின் பாதுகாப்பு கருதி, புயல் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். கோவளத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி, மீனவர்களுக்கு போதிய குடிநீர் வழங்க வேண்டும். சதுரங்கப்பட்டினம், பட்டிபுலம், கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்க
வேண்டும்.மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இறால் பண்ணைகளை, கடலோர பகுதிகளில் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். சதுரங்கப்பட்டினம், கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு டீசல் பங்க் அமைக்க வேண்டும். புதுப்பட்டினத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயராமன், ரஞ்சிதம், குமுதா ராஜாராமன், ஆறுமுகம், பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்கரபாணி நன்றி கூறினார்.

Tags : Kanchippuram ,district demand conference ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை 2-ஆகப் பிரித்த...