×

பிராமணர் சங்கம் வலியுறுத்தல் குத்தாலத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம் வி.சி.கட்சியினர் திரண்டனர்

மயிலாடுதுறை, அக்.1: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தொழுதாலங்குடி மற்றும் சேத்திரபாலபுரம் பகுதிகளில் பல ஆண்டுகளாக ராமாமிர்தம் நகர் நாராயணசாமி நாயுடு தெருவிற்கு தரமான சாலை வசதி இல்லை என்று பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல ராமாமிர்தம் நகரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பிடிஓவிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொழுதாலங்குடி ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவிற்கு தரமான சாலையும் புதிதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியினை அமைத்து கொடுக்க பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நேற்று குத்தாலம் ஓஎன்ஜிசி பிளான்ட் முன் தனியார் திடலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு ராசேகரன் முன்னிலை வகித்தார், பாரதி, பாலு, தொழுதாலங்குடி ஸ்டாலின், சிரஞ்சீவி, தமிழரசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈழவளவன் உரையாற்றுகையில்,‘இந்த ஊரில் உள்ள இடிந்த நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை வந்து பாருங்கள் அதன்பிறகு அதிகாரிகள் பேசட்டும், பலமுறை இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டும் இப்பகுதி மக்களை துச்சமாக மதிப்பதே வாடிக்கையாகிவிட்டது. எந்த குறையை சொன்னாலும் கேட்பதில்லை, அடிப்படை வசதிகளை வேண்டுமென்றே செய்து கொடுக்க மறுக்கின்றனர், இப்பிரச்னைகள் முறையாக தீர்க்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : standoff ,Brahmin Union ,party ,panchayat union officials ,protest ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:...