×

நகராட்சி நிர்வாகம் மெத்தனம் பூர்வீக இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உடல்நிலை பாதித்த முதியவர் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு

நாகை, அக்.1: தாத்தாவின் இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 4 குழந்தை மற்றும் மனைவியுடன் கணவன் நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில் 4 குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத முதியவர் தனது மனைவியுடன் வந்தார். அவர்கள் கலெக்டர் பிரவின் பி நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் குழந்தைகளிடம் விசாரணை நடத்தி முறையாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சங்கர்(55). எனது மனைவி சாந்தி(40). எங்களுக்கு சவுந்திரராஜன், சுந்தர், சந்தோஷ், சாவித்திரி, சரண்யா என்ற 5 குழந்தைகள் உள்ளது. இதில் சவுந்திரராஜன் வேலைக்கு செல்கிறான்.

இதனால் 4 குழந்தைகளுடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளோம். எனக்கு (சங்கர்) தாத்தாவின் வீடு மயிலாடுதுறையில் உள்ளது. வேலை தேடி நாங்கள் எல்லோரும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சென்று விட்டோம். இந்த நேரத்தில் எனது தாத்தாவிற்கு சொந்தமான வீட்டை அபகரித்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் மயிலாடுதுறை வந்த போது வீடு அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. விபத்தின் காரணமாக வலது கால் பாதிப்படைந்துள்ளது. எனவே எனது பூர்வீக இடத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.குடிநீர் இணைப்பு கோரி மனு:கீழையூர் அருகே சோழவித்தியாபுரம் மாதாகோயில் வடக்கு தெருவை சேர்ந்த மேரிபெலிசிட்டா அளித்த மனுவில், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்யாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து எனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்க மறுத்து வருகின்றனர். இடுப்பு எலும்பு பாதிப்பால் வெளியில் சென்று என்னால் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை. எனவே எனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : administration ,land ,
× RELATED பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை,...