×

செய்யாறு பஸ்சில் வாலிபர் கொலை வழக்கு பழிக்குப்பழி தீர்க்க கொலை செய்தோம் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

செய்யாறு, அக்.1: செய்யாறில் நடந்த கொலையில் பழிக்குப்பழி தீர்க்க கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். ெகாஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டு நெசவு ெதாழிலாளி முருகன்காளத்தி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், 2 மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் 3வது மகன் சதீஷ்குமார்(28). டிப்ளமோ பட்டதாரி.இவருக்கு திருமண தோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய கடந்த 2 மாதமாக செய்யாறில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே வேதபுரீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை தோறும் பரிகார பூஜை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை தனது பெற்றோருடன் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் பெற்றோரை வீட்டில் விட்டுவிட்டு சதீஷ்குமார் காஞ்சிபுரம் புறப்பட்டார். முன்னதாக செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் டீ குடித்தார்.அப்போது அங்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், திடீரென சதீஷ்குமாரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, எஸ்பி சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக செய்யாறு ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் டிஎஸ்பிக்கள் சுந்தரம் (செய்யாறு), தங்கராமன் (வந்தவாசி), குணசேகரன் (போளூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், ஆற்காடு அடுத்த ராந்தம் பகுதியில் நேற்று முன்தினம் மோரணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்த 5 பேர் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி பி.சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து வந்து அவர்கள் 5 பேர் மற்றும் காரையும்பறிமுதல் செய்து செய்யாறு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சதிஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.அப்போது, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தேவா(24) கூறியதாவது: காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி தர் கும்பலை சேர்ந்தவர்கள் எனவும், அவரின் மறைவிற்கு பிறகு 4 கோஷ்டியாக பிரிந்து அவரவர் தலைமையில் ரவுடிகளாக வலம் வந்தோம்.
இதில் எங்களுக்குள் நடந்த போட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்த்து என்னை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே வந்தேன். பின்னர், சதீஷ்குமாரை கொலை செய்யதிட்டமிட்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தேன். இதையறிந்த சதிஷ்குமார் கடந்த 3 மாதங்களாக பெங்களூருவில் தலைமறைவாக இருந்தான். பின்னர், சதீஷ்குமார் செய்யாறில் இருப்பதை அறிந்து கடந்த 28ம் தேதி காலை காஞ்சிபுரத்தை சேர்ந்த நண்பர்களான பத்மநாபன்(24), சிகாமணி(25), ரமேஷ்(24), நந்தகோபால்(24) உட்பட 8 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை செய்யாறில் கத்தியால் சாரமாரியாக தாக்கி கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, போலீசார் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், நேற்று காலை செய்யாறு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சவுந்தரபாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Dozens ,men ,bus bus murder ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...