×

மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், செப்.30: ராசிபுரம் ரோட்டரி சங்கம் - எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் உலக இருதய தினத்தை தொடர்ந்தும், தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் 200 கி.மீ. தொலைவிற்கான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று தொடங்கியது.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பிருந்து துவங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். டிஎஸ்பி விஜயராகவன், ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் சத்தியமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பேரணி ராசிபுரம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சாலை பாதுகாப்பு, சாலை விதிமுறைகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். பின்னர் சேலம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற நகரங்களின் ரோட்டரி நிர்வாகிகளோடு இணைந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி மீண்டும் ராசிபுரம் வந்தடைந்தது. இதில் ரோட்டரி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி, குணசேகர், சிவக்குமார்,  தினகர், மணிமாறன், சிட்டி வரதராஜன், எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், ராசிபுரம் போக்குவரத்து காவல் பிரிவு, சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ஆண்டலூர் கேட்டில் புறப்பட்ட பேரணியை எஸ்.பி. அருளரசு தொடங்கி வைத்தார். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம். கடைவீதி. புதிய பேருந்து நிலையம் வழியாக சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஎஸ்பி விஜயராகவன் பேசினார். இப்பேரணியில் போலீசார் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், இளைஞர்களும் ஹெல்மெட் அணிந்தவாறு கலந்து கொண்டனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...