×

தேனாடு கிராமத்தில் காட்டுமாடுகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்

மஞ்சூர், செப்.30: மஞ்சூர் அருகே உள்ள தேனாடு கிட்டட்டிமட்டத்தல் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமானோர் உருளைகிழங்கு, முட்டைகோஸ், பட்டாணி, அவரை, பீட்ரூட், காலிபிளவர், கேரட் உள்ளிட்ட பல வகையான மலைகாய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் அப்பகுதியை சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருவதுடன் இரவு நேரங்களில் மலைகாய்கறி தோட்டங்களில் புகுந்து காய்கறிகளை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காட்டுமாடுகளின் நடமாட்டத்தால் தேயிலைத் தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் காட்டெருமைகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : forest fires ,village ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...