×

சாராயம் காய்ச்சியவர் கைது

ஈரோடு, செப். 30:  ஈரோடு அருகே சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர்.   அரச்சலூர் அருகே வாவிக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக எஸ்.பி., சக்திகணேசனுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், ஈரோடு மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. ரமேஷிற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாகுமார், எஸ்.ஐ சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.அப்போது அங்குள்ள ஒரு சாயப்பட்டறைக்கு அருகில் உள்ள முட்புதரில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.  இதை தொடர்ந்து சாராயம் காய்ச்சியதாக ஈரோடு அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி பழையபாளையம் பெரியார் நெசவாளர் காலனியை சேர்ந்த பழனிசாமி (42) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊரலையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Arrester ,
× RELATED சாராயம் காய்ச்சி விற்றவர் கைது