×

பஞ்சலிங்க அருவியில் தண்ணீர்

உடுமலை, செப். 26:  உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இநத் அருவியல் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் நேற்று முன்தினம் இரவு முதல்  அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.   திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது காலாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான அமராவதி அணை பூங்கா திருமூர்த்தி அணை பஞ்சலிங்க அருவி லிங்கேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. குறிப்பாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ரம்மியமாக தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Panjalinga Falls ,
× RELATED முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை