×

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் குறைந்த வட்டியில் வீட்டு கடன்வசதி

கோவை,செப்.26: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாய்பாபா காலனி, சூலூர், மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி மற்றும் பொள்ளாச்சி கிளைகளில் 8.75 சதவீதத்தில் வீட்டு கடன் வசதி செய்து தருகின்றனர்.  இதில் வீட்டுமனை வாங்க. வீடு கட்ட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடு பழுது பார்க்க, விஸ்தரிக்க, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகையை பெற கடன் வசதி அளிக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.இந்த கடன் வசதியை பெற்றுக் கொள்ள வருமான சான்றிதழ் மற்றும் கடன் வாங்க இருக்கும் சொத்து விபரங்களுடன் நேரில் வர வேண்டும். இவ்வாறு நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Repco ,
× RELATED ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம்