×

சிங்கம்புணரியில் ஊட்டச்சத்து திருவிழா

சிங்கம்புணரி, செப். 26: சிங்கம்புணரியில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து திருவிழா நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரளா தலைமை வகித்தார். திட்ட துணை அலுவலர் கீதா வர்ஷினி, வட்டார மருத்துவர் நபிஷா பானு முன்னிலை வகித்தார். அங்கன்வாடி பணியாளர்கள் பாரம்பரிய உணவு, சக்தி தரும் உணவு, வளரும் உணவு குறித்து கண்காட்சி வைக்கப்பட்டது. தொடர்ந்து நவதானிய கோலம், உணவு விழிப்புணர்வு நாடகம், ஊர்வலம் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, மேற்பார்வையாளர் இந்திரா, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் டைட்டஸ், மருத்துவத்துறை செவிலியர்கள், வளர் இளம் பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nutrition Festival ,Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...