×

ஓட்டேரி, விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வார அதிகாரிகள் உறுதி: எம்.கே.மோகன் எம்எல்ஏ தகவல்

சென்னை: திமுக எம்எல்ஏ எம்.கே.மோகன் கோரிக்கையை ஏற்று ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்.கே.மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் தொகுதியின் பெரும்பாலான வட்டங்கள் வழியாக செல்கின்றன. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு மழை காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதித்து கடும் அவதிக்குள்ளானது.

இந்த ஆண்டு மழை பருவம் கிட்டத்தட்ட துவங்கிவிட்ட நிலையில் இரண்டு கால்வாய்களும் தூர்வாரப்படாமல் குப்பைகளும், செடிகளுமாய் காட்சி அளித்து வருகின்றது. மழை பொழியும் பட்சத்தில் இரண்டு கால்வாய்களிலும் மழைநீர் தேங்கி மக்கள் குடியிருப்புக்குள் நிச்சயம் புகுந்து பேராபத்தை ஏற்படுத்தும். எனவே பொதுமக்களின் இப்பிரச்சனையை குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நான் பொதுபணித்துறை நீர் வள ஆதாரத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கண்காணிப்பு பொறியாளரை நேரில்  சந்தித்தும் காலம் தாழ்த்தாமல் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக தூர்வார மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொண்டேன். அதன்படி, எனது தொடர் கோரிக்கையை ஏற்று  விரைவில்  தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.   இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : areas ,Virugambakkam ,Oteri ,MK Mohan MLA ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை