×

இலைக்கடம்பூர் பெரிய ஏரியில் பனைவிதை நடும் பணி

அரியலூர்,செப்.25: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள இலைக்கடம்பூர் பெரிய ஏரியில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் நடுவதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மழை நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கும் மற்றும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கு பயன்படுகின்றது. இந்த மரத்தை கால்நடைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் சேதப்படுத்துவதில்லை. இந்த மரத்தின் பயன்பாடு சுமார் 100 வருடங்கள் அளிக்கின்றன.செந்துறை வட்டாரத்தில் செந்துறை மற்றும் சண்ணாசிநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களில் 1லட்சம் பனை விதைகள் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நடவு செய்ய திட்டமிடப்பட்டு இலைக்கடம்பூர் பெரிய ஏரியில் இருபுறமும் பனை விதைகள் நடவு செய்யும் பணி இலைக்கடம்பூர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மேம்பாட்டு குழு தலைவர் சிலம்பரசன் மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சிநாதன் ஆசிரியர்கள் ராஜகிருஷ்ணன், மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டு 2000பனை விதைகள் விதைப்பு செய்யப்பட்டது. பனை விதை விதைப்பு செய்யும்போது செந்துறை வட்டார துணை வேளாண்மை அப்பாவு, அட்மா திட்ட மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Ilakkadampur ,lake ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!