×

வெங்கனூர் விருத்தீஸ்வரர் கோயிலில் சாரண, சாரணியர்கள் தூய்மை பணி

பெரம்பலூர்,செப்.25: வெங்கனூர் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பாரதசார ண சாரணியர் தூய்மைப் பணிகளைச் செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மா பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங் கனூர் விருத்தகிரீஸ் வரர் கோயிலில் உலகத் தூய்மை தினத்தை யொட்டி தூய்மைப் பணிகளைச் செய்தனர். பெரம்பலூர் கல்வி மாவட்ட சாரண செய லாளர் மணிமாறன் வரவே ற்றார்.பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமீ னாள் தலைமை வகித்து, தூய்மைப் பணியை தொட ங்கி வைத்துப் பேசினார்.கோயில் தர்மகர்த்தா ரமே ஷ், சிவக்குமார், பிரபாக ரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தத் தூய்மைப் பணியில் அரும்பாவூர், பூலாம் பாடி, வெங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளிகளைச் சேர் ந்த, சாரண சாரணியர்கள் மற்றும் தொண்டமாந்து றை, கவுண்டர் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சாரண, சாரணியர், மலை யாளப்பட்டி அரசு ஆதிதிரா விடர் நல உயர்நிலைப் பள்ளி சாரண சாரணியர்க ள் என மொத்தம் 77பேர் கலந்து கொண்டனர். இந்த பணிகளின் போது கோயில் வளாகத்தைச் சுற்றிலும் இருந்த புற்செடிகளை அக ற்றினர். பிளாஸ்டிக் குப்பை களைத் தனியாக பிரித்தெ டுத்து அப்புறப்படுத்தினர்.வெங்கனூர் கிராமப்புற தெருக்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாச கங்களை முழக்கமிட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். இந்த பயிற்சியின்போது சாரண ஆசிரியர்கள் தூய்மைப்பணியை கண் காணித்தனர். கவுண்டர்பாளையம் சார ண ஆசிரியை சரஸ்வதி நன்றி தெரிவித்தார்.

Tags : Scout ,
× RELATED கூடலூரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி