×

மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், செப். 25: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்லாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீதம் (அதிகபட்ச மானியம் ₹25 ஆயிரம்) மானியம் மற்றும் கடன் தொகையில் இருசக்கர வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் மகளிருக்கு அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது, மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலையிலான அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் பெறுவதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான, வேலைக்கு செல்லும் மகளிர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மகளிர்  திட்ட அலுவலகத்தை 04286-281131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாடுகள் வரத்து அதிகரிப்பு