×

ரேவதி மெடிக்கல் சென்டரில் காப்பீட்டு திட்ட பயனாளிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி

திருப்பூர், செப்.25: திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்தவர்களை  கவுரவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ்நாட்டில் பிரதம மந்திரி, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சையில் எவ்வித சமரசமும் செய்யாமல் காப்பீட்டு திட்டம் மூலம் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது,’ என்றார். இதில் மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி, இருதய நல மருத்துவர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Revathy Medical Center ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்