×

ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது

திருப்பூர்,செப்.18: திருப்பூர் ஊத்துக்குளி சாலை கேட்டு தோட்டம் அருகே நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்ட நிலையில் வாலிபரின் சடலம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பரங்கா நந்தா மண்டல்(23). திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினருடன் தங்கி பின்னாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரி இல்லாததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்த இவர் கேட்டு தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அடிபட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

The post ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Keti Garden ,Oothukuli road ,Ramesh ,
× RELATED 7 வயது மகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு