×

அன்னூரில் அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் சேர்க்கை

கோவை, செப்.25: தமிழ்நாடு கட்டுமான நல வாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியம், தொழிலாளர் உடலுழைப்பு நல வாரியம் உள்ளிட்ட அமைப்பு சாரா நல வாரியங்களுக்கான உறுப்பினர் சேர்க்கை அன்னூர், காரேகவுண்டம் பாளையத்தில் உள்ள கெம்மநாயக்கன்பாளையத்தில் நடக்கிறது.இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் (சமூக பாதுகாப்பு திட்டம்)கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் , அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியம், தொழிலாளர் உடலுழைப்பு நல வாரியம் உள்ளிட்ட அமைப்பு சாரா நல வாரியங்களில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் வரும் 27ம் தேதி கோவை மாவட்டம், அன்னூர் காரேகவுண்டம்பாளையத்தில் உள்ள கெம்மநாயக்கன் பாளையம் கிராம சமுதாய நல கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது.  இம்முகாமில் கலந்துகொண்டு உறுப்பினராக பதிவு செய்ய பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் இரண்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி கல்வி மாற்று சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் தலா ஒன்றும், ஓட்டுநர் உரிமம் அசல் மற்றும் நகல், நியமனதாராருக்கான ஆவண நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆவணங்களின் உண்மைதன்மைக்கான சான்று அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து தமிழக அரசின் நலதிட்ட நிதி உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு வெங்கடேசன் கூறியுள்ளார்.

Tags : Welfare Board ,
× RELATED நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய...