×

பரமன்குறிச்சியில் அற்புத பெருவிழா

உடன்குடி,செப்.25:பரமன்குறிச்சி, சீயோன்நகரில் அற்புத பெருவிழா நடந்தது. பரமன்குறிச்சி சீயோன்நகர் பூரண கிருபை ஏஜி சபை சார்பில் அற்புத பெருவிழா 3 நாட்கள் நடந்தது. விழாவையொட்டி  மாலை 6.30மணிக்கு சிறப்பு பாடல் ஆராதனை, பிரார்த்தனைகள் நடந்தது. விழா நாட்களில் கன்னியாகுமரி பேராயர் ராஜனின் சிறப்புரை, முதலூர் ஏஜி சபை தலைமை போதகர் ரவிக்குமாரின் சாட்சி பகிர்தல், போதகர் சிகாமணியின் இறையாசீர் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சபை தலைமை போதகர் பெமிட்டன் மற்றும் சபைமக்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Paramankurichi ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!