×

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதா? கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

தூத்துக்குடி, செப். 25: விளை  நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி  மாவட்டத்தில் தட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், செக்காரக்குடி,  புளியம்பட்டி, பூவாணி, தெய்வச்செயல்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார  கிராமப்பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில்  கடந்த சில வருடங்களாக தனியார் நிறுவனத்தினர் மூலமாக காற்றாலைகள்  அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும்  மின்சாரத்தை எடுத்துச்செல்ல விளைநிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி  உயர்மின் கோபுரங்கள், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து  விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய விளை  நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, விவசாய விளை நிலங்களில்  அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களுக்காக மாதந்தோறும் சம்பந்தப்பட்ட  நிலத்திற்குரிய விவசாயிகளுக்கு மாத வாடகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட  குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை நேற்று நடத்தினர். மாநில பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தார்.  இதில் மாவட்டத் தலைவர் மணி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ராமசுப்பு  மற்றும் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Tags : towers ,lands ,Collector's Office ,
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்