×

வத்தலக்குண்டுவில் சுப்பிரமணிய சிவாவுக்கு சிலை வைக்க வேண்டும் விசி கட்சியினர் கோரிக்கை

வத்தலக்குண்டு, செப். 25: வத்தலக்குண்டு பேரூராட்சி அருகிகேயுள்ள சங்கரன் பூங்காவை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் பாரதியார்,
வ.உ.சிதம்பரம் ஆகியோரோடு இணைந்து சுதந்திரத்திற்காக போராடிய வத்தலக்குண்டுவில் பிறந்து சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலக்குண்டுவில் சிலை இல்லை. மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டயபுரத்தில் மணிமண்டபம் உள்ளது. வ.உ.சிதம்பரத்திற்கு அவர் பிறந்த தூத்துக்குடியில் மணிமண்டபம் உள்ளது.ஆனால் சுப்பிரமணியசிவாவுக்கு வத்தலக்குண்டுவில் இதுவரை மணிமண்டபம் கட்டப்படவில்லை. ஒரு சிலை கூட வைக்கப்படவில்லை. எனவே ஊரின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் சுப்பிரமணியசிவா வைக்க வேண்டும் என்று வத்தலக்குண்டு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கூறுகையில் ‘சுப்பிரமணியசிவாவுக்கு வத்தலக்குண்டு அக்ரஹாரம் நடுத்தெருவில் சொந்தவீடு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் அங்கு சுப்பிரமணியசிவாவுக்கு வீடு இல்லை. தனது வாழ்வையே சுதந்திரத்திற்காக அர்பணித்த தியாகிக்கு இதுவரை இங்கு சிலை வைக்கப்படவில்லை. எனவே பூங்காவில் சிவா சிலை வைக்க வேண்டும். அவரது சிலையை செய்து தர எங்கள் கட்சி காத்திருக்கிறது’ என்றார்.

Tags : parties ,Subramanya Siva ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...