×

மக்கள் குற்றச்சாட்டு நீடாமங்கலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 692 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,செப்.25: நீதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ,மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்களை அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து.அங்கிருந்து பல்வேறு திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் அரவை செய்த அரிசிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் பெட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காகவும்,அரிசிகளை பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கோடை சாகுபடியில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள், மற்றும் கடந்த சம்பா ,தாளடியில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ள தலையாமங்கலம் மற்றும் மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி,நவீன அரிசி ஆலை சுந்தரகோட்டை பகுதிகளில் சேமித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் 692 டன் பொது ரக நெல் மூட்டைகளும், மத்திய சேமிப்பு கிடங்கு பாமணியிலிருந்து 242 டன் சன்ன ரக அரிசி மூட்டைகளும் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 75 லாரிகளில் கொண்டு வரப்பட்டது.பின்னர் அங்கிருந்து 20 ரயில் பெட்டிகளில்(வேகன்) தொழிலாளர்கள் ஏற்றி திருநெல்வேலி மண்டலத்திற்கு நெல் மூட்டைகளை அரவைக்கும்,அரிசி மூட்டைகளை பொது விநியோகதிட்டத்திற்கும் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Neetamangalam ,Tirunelveli ,
× RELATED ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு