×

லால்குடி அருகே வனப்பகுதியில் பன்றி வேட்டையாடிய 21 பேர் கைது 12 வேட்டை நாய்கள் மினிவேன் பறிமுதல்

லால்குடி, செப்.24: லால்குடியை அடுத்த எம்.ஆர் பாளையம் காப்புக்காட்டில் சட்டவிரோதமாக வேட்டையில் ஈடுபட்ட புதுகையை சேர்ந்த 21 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 12 நாய்கள், மினிவேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் மர்மநபர்கள் பலர் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் வனவர்கள் கோடீஸ்வரன், சரவணன், எழில்ரகுமான், வனகாப்பாளர்கள் திருஞானசம்மந்தம், ஞானசம்மந்தம் ஆகியோர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மர்மநபர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மணமேல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்த முருகன்(52), சுப்பையா(53), செல்வம்(42), சங்கர்(30), கண்ணன்(27), லெட்சுமணன்(23), சரவணன், வடிவேல்(35), செல்வமணி(23), சின்னையன்(27), ஞானவேல்(28), சக்திவேல்(29), சுந்தர்ராஜ்(25), இளையராஜா(36), கிருஷ்ணன்(25), முருகன்(29), சுப்ரமணி(25), முத்துவேல்(18), கோபிபிரசாத்(18), கருப்பையா(18), மினிவேன் டிரைவர் முருகன்(34) ஆகிய 21 பேரை கைது செய்தனர். மேலும் காட்டுப்பன்றி வேட்டைக்கு பயன்படுத்திய 12 நாய்கள், மினிவேனை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் 21 பேர் மீது வழக்குபதிவு செய்த வனத்துறை அதிகாரிகள், லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி அவர்களை திருச்சி சிறையில் அடைத்தனர்.
21 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9, 39 மற்றும் 51 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : forest area ,Lalgudi ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!