×

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

பொன்னமராவதி,செப்.24: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர் மன்ற நிர்வாகிகளுக்கு பொன்னமராவதியில் பாராட்டு விழா நடந்தது. பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற, 17பி குறிப்பாணை பெற்ற ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சண்முகநாதன், மாவட்டச் செயலாளர் செல்வராசு, ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் பெரியதம்பி, ஒன்றிய நலநிதி தலைவர் பழனியப்பன் உட்பட பலர் சிறை சென்ற ஆசிரியர்களை பாராட்டி பேசினர். பின்னர் சிறை சென்ற கொள்கை விளக்க அணிச் செயலாளர் சரவணணுக்கு ஒரு பவுன் மோதிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.  17பி குறிப்பாணை பெற்ற நிர்வாகிகள் 23பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சண்முகநாதன், புதுகை ஒன்றியத் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி பழனிச்செல்வம், இதில் நிர்வாகிகள் கிளாராமேரி, வசந்தா, சரவணபெருமாள், மணிகண்டன், பால்ராஜ், தமிழ்மணி, யோகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சரவணன், வினோத்குமார் ஆகியோர் ஏற்புரையாற்றினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். முடிவில் தகவல் தொழில் நுட்பச் செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

Tags : teachers ,prison ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...