×

பட்டாபிராம் - ஆவடி இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, செப். 24: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக பட்டாபிராம் மில்டிரி சைடிங்- ஆவடி இடையே இன்று, நாளை மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை மூர்மார்க்கெட்- பட்டாபிராம் மில்டிரி சைடிங் இடையே இன்று, நாளை மற்றும் 26ம் தேதி இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி- பட்டாபிராம் வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் வேளச்சேரி - பட்டாபிராம் மில்டரி சைடிங் இடையே இன்று, நாளை மற்றும் 26ம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி- பட்டாபிராம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைப் போன்று பட்டாபிராம்- சென்னை மூர்மார்க்கெட் இடையே இன்று, நாளை மற்றும் 26ம் தேதி வரை இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பட்டாபிபராம்- ஆவடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Avadi ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்