×

எம்எல்ஏ முயற்சியால் ஒட்டன்சத்திரம் சின்னக்குளம் ரூ.7 கோடியில் சீரமைப்பு

ஒட்டன்சத்திரம், செப். 19: ஒட்டன்சத்திரம் சின்னக்குளம் அர.சக்கரபாணி எம்எல்ஏ முயற்சியால் ரூ.7 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ஒட்டன்சத்திரம் நகரின் மையத்தில் 11.83 ஹெக்டேர் பரப்பளவில் சின்னக்குளம் அமைந்துள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இக்குளத்தின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், குழந்தைகள் விளையாடுமிடம், செயற்கை நீருற்று, மின்விளக்கு வசதிகள் என பல்வேறு அம்சங்களுடன் கூடிய பூங்காவாக அமைத்து தர வேண்டுமென கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அர.சக்கரபாணி எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார். இதனை பரிசீலிதத்த அரசு, சின்னக்குளத்தை ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்திட ரூ.7 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் பொறியாளர் சாகுல்ஹமீது, நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Ottanasattaram Chinnakulam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்