×

பந்தலூர் அருகே லேப்டாப் கேட்டு பள்ளி முற்றுகை

பந்தலூர், செப்.19: பந்தலூர் அருகே லேப்டாப் வழங்க கோரி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலூர் அருகே பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2016-17ம் கல்வி ஆண்டில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. இதேபோல், கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் படித்த 127 மாணவர்களுக்கு லேப்டாப் தற்போது வந்துள்ளது.ஆனால், அவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு உத்தரவு வரவில்லை. இந் நிலையில், 2019-20ம் கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பில் படிக்கும் 288 மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் இலவச லேப்டாப் வழங்குவதாக நேற்று தகவல் பரவியது. இதனால், ஏற்கனவே லேப்டாப் கிடைக்காத   மாணவர்கள் பள்ளிக்கு சென்று தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : School siege ,Bandalur ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே அரசு...