×

ராகுல் காந்தியை விமர்சித்த அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப். 19: ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ராகுல் காந்தியை விமர்சித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். நகர தலைவர் சி.பி.மோகன்தாஸ் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.டி.அருள்மொழி, தளபதி மூர்த்தி, சம்பத், பிரபாகரன், சி.மதன், ஜெ.கே.வெங்கடேசன், வி.இ.ஜான், ஏ.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், வட்டார, நகர, பேரூர் தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Rahul Gandhi ,Congress ,protests ,
× RELATED சொல்லிட்டாங்க...