பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

பழநி, செப். 17:  பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14ம் தேதி நடந்தது. நேற்றிரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. காலை 6. 30 மணிக்கு தேரேற்றம் நடந்தது. காலை 9 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

 இதில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மறுதினம் மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.  

Related Stories:

>