×

கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் டிரான்ஸ்பார்மரால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு

கரூர், செப். 17: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மேற்குபிரதட்சணம் சாலையில் மினிபேருந்து நிலையத்தை அடுத்து டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் இந்த டிரான்ஸ்பார்மர் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் அருகே வடிகால் உள்ளது. போதுமான இடமும் இருக்கிறது. வடிகால் ஓரத்தில் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. டிரான்ஸ்பார்மரை ஒட்டி பொது இடம் உள்ளது. இதனையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை எல்லைக்கல் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்தில் இருந்து 5 அடிக்கும் மேலே இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினரிடம் தெரிவித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பஸ் நிலைய முன்புற சாலையான இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. மினி பேருந்துகளை இந்த இடத்தில் நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Transformer ,Karur West Main Road ,
× RELATED பெரியபாளையம் அருகே பழுதடைந்த...