×

தரங்கம்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர் தேர்வு

மயிலாடுதுறை,செப்.15: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பானர்கோவிலில் புதிதாக தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டது.

அந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் புதிய சங்கத்தை தோற்று வித்தனர். இதற்கான பொறுப்பாளர்களாக கருணாநிதி, திருமால்சுந்தரம், சங்கமித்திரன் ஆகியோர் இந்த தேர்தலை நடத்தினர்.
தலைவராக குணசேகரனும், பொருளாளராக சண்முகசுந்தரம், துணைத் தலைவர்க்ள் தமிழச்செல்வன், கோபிநாத், இணைச் செயலாளராக குணா, நிர்மலா, நூலகராக திவ்யபாரதி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில் ராஜ்குமார் வெற்றிபெற்றார்.

Tags : Attorney-at-Law ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி