×

டெங்கு முன்னெச்சரிக்கை நிலவேம்பு குடிநீர் விநியோகம்

ஊத்துக்கோட்டை, செப். 11: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் சிறப்பு முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடுகளில் உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், ஆட்டுக்கல், தண்ணீர் தொட்டி முதலியவைகளை சோதனை செய்தும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொசு வலை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு  தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் பஸ் நிலையம், அண்ணாசிலை அருகிலும் காவல் நிலையம் முன்பும், அரசு தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளில்   நடைபெற்றன.இதில், ஊத்துக்கோட்டையில் உள்ள 15 வார்டுகளில் நிலவேம்பு குடிநீர்  முகாம்கள்  அமைத்து காய்ச்சல் உள்ளவர்கள், அல்லாதவர்கள் என அனைவருக்கும்  வழங்கப்பட்டு வருவதாக  பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...