×

பழநி மலைக்கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி

பழநி, செப். 10: பழநி மலைக்கோயிலில் தீ விபத்து காலங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 90 நாட்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று மலைக்கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா முன்னிலை வகித்தனர். கோயிலில் பணிபுரியும் கோயில் ஊழியர்கள், செக்யூரிட்டிகள், சுகாதார பணியாளர்கள், சமையலர்களுக்கு தீயணைப்புப்படையினர் பயிற்சிகள் அளித்தனர்.காஸ் கசிவை தடுக்கும் முறை, தீ விபத்து காலங்களில் செயல்படும் விதம், மயக்கமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை, உயரமான இடங்களில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டன.  மேலும் மின்சார கசிவினால் ஏற்படும் தீவிபத்து, காஸ் கசிவினால் ஏற்படும் தீவிபத்து, எண்ணெய்களில் தீப்பிடித்தலின் வகைகள், அணைக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. தீயணைப்புத்துறையினர் முதலில் செய்துகாட்டி, பின்பு கோயில் ஊழியர்களை அதுபோல் செயல்பட அறிவுறுத்தினர். இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது என்பதால், எங்கள் சமத்துவபுரத்தை புறக்கணிக்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல், வெறும் காற்றுதான் வருகிறது. விருப்பாட்சி சுற்றுப்புறங்களில் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. காவிரியில் வெள்ளம் போகிறது. ஆனால் எங்களுக்குத்தான் காவிரி தண்ணீர் வருவதில்லை.

Tags : Palani Hills ,
× RELATED கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் 60 அடி...