×

திருமயம் அருகே மழை, வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மேற்கூறை இல்லாததால் அவதி

திருமயம்,செப்.10: திருமயம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாப்புகளும் மேற்கூறை இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வழியாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றபட்டதோடு டவுன் பஸ் நின்று செல்ல கிராம மக்களுக்காக கட்டப்பட்டிருந்த 14 பஸ் பஸ்டாப்புகளும் அகற்றப்பட்டது. அகற்றபட்ட 14 பஸ் ஸ்டாப்புகளுக்கு பதிலாக தற்போது 8 ஸ்டாப்புகள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில் அதையும் அதிகாரிகள் சரிவர பரமரிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது நமணசமுத்திரத்தில் இருந்து சவேரியர்புரம் வரை செல்லும் சாலையில் மாநில சாலையாக இருந்த போது இருந்த பஸ் பஸ்டாப்புகள் கான்ங்ரீட்டால் ஆனா மூன்று புறம் சுவர்களால் மறைக்கப்பட்ட பஸ் ஸ்டாப்புகளாக இருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையான பின்னர் அனைத்து பஸ் ஸ்டாப்புகளும் இடிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் நான்கு குழாய் கம்பிகளை நட்டு அதன் மேல் 3 தகரத்தை கொண்டு மூடி பஸ் ஸ்டாப்பு போல் கட்டி கொடுத்தனர். அவ்வாறு கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்புகள் வழக்கமாக பஸ் நிற்கும் இடத்தில் கட்டாமல் சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டியதோடு பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் ஸ்டாப்புகள் கட்டிதரவே இல்லை. இந்த பஸ் பஸ்டாப்புகள் வெயில், மழை எதையும் தாங்குவதில்லை. காரணம் நான்கு புறமும் பஸ் ஸ்டாப் திறந்த வண்ணம் இருப்பதால் வெயில், மழை எதுவாயினும் பஸ்சுக்காக காத்திருக்கும் பணயிகளை எளிதாக தாக்குகிறது.

இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவர்கள், முதியோர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பஸ் ஸ்டாப்புகள் காற்று, மழையினால் சேதமடைந்து ஒரு சில பஸ் ஸ்டாப்புகள் மேற்கூறை இல்லாமல் உள்ளது. இது பற்றி எந்த ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்து உள்ள பஸ் ஸ்டாப்புகளை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு வலையன்வயல், கொத்தமுத்துப்பட்டி, அரசம்பட்டி, வீரப்பட்டி, குளத்துப்பட்டி விலக்கு உள்ளிட்ட பஸ் ஸ்டாப் தேவைப்படும் கிராமங்களுக்கு புதிய பஸ் ஸ்டாப் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : public ,Thirumayam ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...