×

மின்கம்பத்தில் 3 சக்கர சைக்கிள் மோதி கூலிதொழிலாளி பலி

ஆவடி, செப்.10: ஆவடி, நந்தவனமேட்டூர், முருகன் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி  என்ற செல்வன்  (49). இவர், நேற்று காலை மூன்று சக்கர வண்டியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆவடி, மேட்டு  சேக்காடு, பஜனை கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று  கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி  சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மீது மோதி கவிழ்ந்தது. இதில்,  காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பாப்பாத்தி இறந்ததாக தெரிவித்தனர்.

Tags : wrist worker ,
× RELATED அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 3 மூதாட்டி பலி