×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஜோகாவிச்-மெட்வடேவ் மோதல்..!

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் மெட்வடேவ் 6-4, 7-5, 6-2  என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில் டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னன் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ்வும் மோதினர். போட்டி தொடக்கம் முதலே அனல் பறந்தது. இருவரும் கடுமையாக மோதினர். இதில் முதல்செட்டை ஸ்வரெவ் 4-6 என்று கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து வெகுண்டெழுந்த ஜோகோவிச் அடுத்தடுத்து இரண்டு செட்களை 6-2, 6-4 என்று கைப்பற்றினார். 4வது செட்டை ஸ்வரெவ் 4-6 என்று கைப்பற்ற கடைசி செட்டை ஜோகோவிச் 6-2 என எடுத்து போராடி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அவர் மெட்வடேவுடன் மோதுகிறார்.‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கனடாவின் 19 வயது லேலா பெர்னாண்டஸ், பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை எதிர்கொண்டார். 2 மணி 20 நிமிடம் நீடித்த இந்த மோதலில் லேலா பெர்னாண்டஸ் 7-6 (7-3), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான யம்மா ராட்கனு (இங்கிலாந்து), 18-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரியை (கிரீஸ்) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். அத்துடன் கடந்த 62 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் சொந்தமாக்கினார். இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான யம்மா ராட்கானு-லேலா பெர்னாண்டஸ் ஆகியோர் மோதுகின்றனர். 1999-ம் ஆண்டுக்கு பிறகு (செரீனா வில்லியம்ஸ்-மார்ட்டினா ஹிங்கிஸ்) கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் இரண்டு இளம் வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்….

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஜோகாவிச்-மெட்வடேவ் மோதல்..! appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Djokavich ,Medvatev ,NEW YORK ,US Open ,Medvadev ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல்: 10 லட்சம் ரசிகர்கள் பார்த்து சாதனை