திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவெடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. மாவட்ட வளர்ச்சிக்காக நாள்தோறும் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருவதாக கலெக்டர் தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் ஆசிரியர் நகர் முதல் ஹவுசிங் போர்டு வரை உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் வாணியம்பாடி மெயின் ரோடு அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, பஸ் நிலையம் முதல் பஸ் வெளிவரும் சாலைகள் அனைத்தும் கரடுமுரடான சாலைகளாக காட்சியளிக்கிறது. இதில், பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்து வருகின்றனர். மேலும் நாள்தோறும் தொடர் விபத்துகள் ஏற்பட்டு சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் வாணியம்பாடி ரோடு, புதுப்பேட்டை ரோடு பகுதிகளில் உள்ள சாலைகளில் நடுவே ஏற்பட்டுள்ள பாதாள பள்ளங்களில் அதிகளவில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த சாலையில் நாள்தோறும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் நான்கு சக்கர வாகனத்தில் செல்கின்றனர். அப்போது சாலையில் நடுவே உள்ள பாதாள பள்ளங்களை கண்டும் இவர்கள் அதற்கான திட்ட பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் இந்த சாலை ஒதுக்கப்பட்டுள்ளதால் இதனை நாங்கள் சரி செய்ய முடியாது என்று தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக கலெக்டர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி தற்போது சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆம்புலன்ஸ் வாகனங்களும் தவிப்புபிரதான சாலைகளான கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கிறது. இந்த வாகனங்கள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றன. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இதில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது….
The post திருப்பத்தூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளால் மக்கள் அவதி-சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.
