×

உல்லாச வாலிபர் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த இந்து (45,பெயர் மாற்றப்பட்டுள்ளது) அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்(24) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்துள்ளார். அதை நம்பிய எனது மகள் தினேஷ் உடன் சென்றுள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தினேஷ் எனது மகளை லாட்ஜிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் எனது மகளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரை மிரட்டி வருகிறார். எனவே எனது 17 வயது மகளை ஏமாற்றி சீரழித்த தினேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தினேஷ், பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது ெசய்தனர்….

The post உல்லாச வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indu ,MGR Nagar ,Ashok Nagar All Women Police Station ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...