நாகுடியில் திமுக ஆலோசனை கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 25: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றியம் நாகுடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருமயம் எம்எல்ஏவுமான ரகுபதி, திமுக உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திமுக தலைமை கழக பிரதிநிதியும், தெற்கு சென்னை மாவட்ட துணை செயலாளருமான விஸ்வநாதன், திமுக சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் அறந்தாங்கி ராஜனுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு அப்துல்லா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Advisory Meeting ,
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்